ஓடும் காரில் இருந்து விழுந்த நிறைமாத கர்ப்பிணி.. குழந்தை பெற்றெடுத்து பலி: தொல்லை தந்த மர்ம நபருக்கு வலைவீச்சு

Report Print Basu in அவுஸ்திரேலியா
120Shares

அவுஸ்திரேலியாவில் ஓடும் காரில் இருந்து விழுந்த நிறைமாத கர்ப்பிணி பெண், மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்த பின் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

மெல்போர்னுக்கு வடமேற்கே 20 கி.மீ தொலைவில் உள்ள Keilor Downs பகுதியை சேர்ந்த 32 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிசார் வெளியிட்ட தகவலின் படி, சனிக்கிழமை நண்பகல் 1 மணி அளிவில் Keilor Downs பகுதியில் Kiwi Retreat கட்டிடத்திற்கு வெளியே நபர் ஒருவர் கர்ப்பிணிப் பெண்ணைத் தாக்கி அச்சுறுத்தியதாக கூறுகின்றனர்.

பின்னர், காரிலும் அச்சுறுத்தல்கள் தொடர்ந்துள்ளது, வாகனம் வளைவில் திரும்பும் போது பெண் காரில் இருந்து வெளியே விழுந்துள்ளார். படுகாயமடைந்த பெண் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் ராயல் மெல்போர்ன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவர் காயங்களால் இறப்பதற்கு முன், சிசேரியன் வழியாக குழந்தையை பிரசவித்துள்ளார். மருத்துவமனையில் உள்ள குழந்தையும் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஓடும் காரில் இருந்து பெண் எப்படி விழுந்தார் என்பது தற்போது வரை மர்மமாக உள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக Keilor Downs பகுதியைச் சேர்ந்த 35 வயதாக நபரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்