படகில் கழிவறையை பயன்படுத்திக்கொண்டிருந்த பெண்ணுக்கு கிடைத்த எதிர்பாராத அதிர்ச்சி!

Report Print Balamanuvelan in அவுஸ்திரேலியா

படகு ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த ஒரு பெண் கழிவறையை பயன்படுத்திக்கொண்டிருக்கும்போது, படகு ஏதோ ஒரு பொருள் மீது மோதியிருக்கிறது.

பிரிஸ்பேன் ஆற்றில் சென்று கொண்டிருந்த அந்த படகு மோதிய வேகத்தில், படகிலிருந்த 60 பேரில் நால்வருக்கு காயம் ஏற்பட்டது.

அவர்களில் 30 வயது பெண் ஒருவர் தூக்கி வீசப்பட்டு படகின் மேல் தளத்திலிருந்து கீழே விழுந்திருக்கிறார்.

விழுந்த வேகத்தில் அந்த கூரை உடைய, உடைந்த கூரையிலுள்ள துவாரம் வழியாக அந்த பெண் கீழே விருந்திருக்கிறார்.

அவர் விழுந்த இடம் ஒரு கழிவறைக்குள். அந்த நேரத்தில், கழிவறைக்குள் ஒரு 70 வயது பெண்மணி கழிவறையை பயன்படுத்திக் கொண்டிருந்திருக்கிறார்.

விழுந்த இளம்பெண், அந்த முதிய பெண்மணியின் மடியில் போய் விழுந்திருக்கிறார். அதில் அந்த பெண்மணிக்கு காலில் கீறல் ஏற்பட, அந்த இளம்பெண்ணுக்கு முதுகில் அடிபட்டிருக்கிறது.

காயமடைந்த அனைவரும் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்