வெளிநாட்டில் பாலியல் வழக்கில் சிக்கிய இந்தியாவின் பிரபல சாமியார்! புகைப்படத்துடன் வெளியான பின்னணி

Report Print Raju Raju in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது, இரு வேறு சம்பவங்களில் பெண்களிடம் தவறான நடந்துகொண்டதாக கைது செய்யப்பட்ட இந்தியாவை சேர்ந்த பிரபல சாமியார் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பிரக்யாராஜில் ஹனுமார் கோவிலில், பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தவர் யோகா குரு ஆனந்த் கிரி.

இவருக்கு சர்வதேச நாடுகளிலும் பக்தர்கள் இருந்ததால், அவ்வப்போது வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தார்.

2016 மற்றும் 2018ம் ஆண்டுகளில் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது இருவேறு சம்பவங்களில் பெண்களிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாக இவர்மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இதனிடையில் கடந்த மே மாதம் மீண்டும் அவுஸ்திரேலியா சென்ற கிரியை பெண்கள் அளித்த புகார்களின் பேரில், சிட்னி பொலிசார் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு சிட்னி நகர நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் கிரிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாராங்கள் இல்லதாததால் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த தகவலை அஹாரா பரிசத் அமைப்பின் தேசிய தலைவர் மகந்த் நரேந்திர கிரி தெரிவித்துள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்