இறக்கும் தருவாயில் இருப்பவர்களின் கடைசி ஆசையை நிறைவேற்றும் ஊழியர்கள்... எந்த நாட்டில் தெரியுமா?

Report Print Santhan in அவுஸ்திரேலியா
221Shares

அவுஸ்திரேலியாவில் இறக்கும் தருவாயில் இருக்கும் முதியவர்களின் இறுதி ஆசையை நிறைவேற்ற ஆம்புலன்ஸ் குழு செயல்பட்டது பிரபலமானதால், அதை அரசே ஏற்று செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டிலிருந்து அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் இருக்கும் அதிகாரிகள் இறக்கும் தருவாயில் இருப்பவர்களின் கடைசி ஆசையை கேட்டறிந்து அவர்களின் ஆசையை நிறைவேற்றி வருகின்றனர்.

அதாவது அவர்கள் தாங்கள் கடைசியாக பார்க்க விரும்பும் இடங்கள், நபர்கள் இன்னும் வேறு என்ன நினைக்கிறார்களோ அனைத்தையும் நிறைவேற்றி வருகின்றனர்.

இது மிகவும் பிரபலமானதால், இந்த நிகழ்வால் ஈர்க்கப்பட்ட குவின்ஸ்லாந்து அரசு இதனை அரசே ஏற்று நடத்த உள்ளதாக அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்த முடிவெடுத்துள்ளது.

இதற்காக தனியான ஆம்புலன்ஸ் ஒன்றையும் அம்மாகாண அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து குவின்ஸ்லாந்து சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்டிவன் மில்ஸ் கூறுகையில், வாழ்க்கையின் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும், மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் சுவாசிக்க முடியாத அவர்களின், நிறைவேற்ற முடியாத கடைசி ஆசையை நிறைவேற்றுவது மிகுந்த சவலான பணி என்று கூறியுள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்