அவுஸ்திரேலியாவில் வயதான நபருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

Report Print Vijay Amburore in அவுஸ்திரேலியா
341Shares

அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு வயதான நபருக்கு 2 கிலோ எடையிலான தங்கக்கட்டி கிடைத்துள்ளது.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு வயதான நபர், Ballarat நகரத்தில் உள்ள காலியான நிலத்தில் 2 கிலோ எடையிலான தங்கக்கட்டியினை கண்டுபிடித்திருப்பதாக, மார்க் டே என்னும் கோல்ட் சப்ளையர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து பேசியிருக்கும் அவர், Ballarat நகரத்தை சேர்ந்த வயதான நபர் இயந்திரத்தின் உதவியுடன் ஒரு காலியான அழுக்கான நிலப்பகுதியில் தங்கத்தை தேடிக்கொண்டிருந்துள்ளார்.

நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் அவருக்கு இந்த தங்கக்கட்டி கிடைத்துள்ளது. இதனை வைத்துக்கொண்டு மூன்று நாட்களாக அவர் உறங்கவில்லை. என்ன செய்வதென கூட அவருக்கு தெரியவில்லை.

எனக்கு தெரிந்த ஒரு நண்பர் மூலம் அவரை என்னுடைய கடைக்கு வரவழைத்தேன். என்னிடம் அந்த தங்க கட்டியினை கொடுக்கும் போது அவருடைய கை முழுவதும் நடுங்கியது. கடந்த 25 ஆண்டுகளில் நான் பார்த்த மிகப்பெரிய தங்கக்கட்டி இது தான். 160,000 டொலர்களுக்கு அந்த தங்கக்கட்டியினை விற்பனை செய்ய அந்த நபர் ஒப்புக்கொண்டார்.

அவர் இந்த புதையலை கண்டுபிடித்த சரியான இடத்தை எங்களிடம் தெரிவிக்கவில்லை. தற்போது பயன்படுத்தும் இயந்திரத்தை விட, மேம்பட்ட தரம் கொண்ட இயந்திரத்துடன் மீண்டும் அதே இடத்தில் தேடுதல் வேட்டை நடத்த உள்ளார் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்