அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு ஏற்பட்ட துயரம்: கதறும் பெற்றோர்

Report Print Arbin Arbin in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் நண்பர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற இந்திய மாணவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்தியாவை சேர்ந்த 21 வயது இளைஞர் போஷிக் சர்மா, அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் தங்கி அங்குள்ள பல்கலைக்கழம் ஒன்றில் படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிகிழமை சர்மாவும் அவரது நண்பர்களும் இணைந்து விக்டோரியா மாகாணத்தின் மேரிஸ்விலி பகுதியில் உள்ள பொழுதுபோக்கு விடுதிக்குச் சென்றுள்ளனர்.

அந்த பொழுதுபோக்கு விடுதியில் மது அருந்தி கொண்டிருந்தபோது சர்மாவுக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் மனவருத்தமடைந்த சர்மா விடுதியில் இருந்து உடனடியாக வெளியேறினார். ஆனால் அவர் தான் தங்கியிருக்கும் இடத்துக்கு செல்லாமல் மாயமானதாக கூறப்பட்டது.

இதையடுத்து விக்டோரியா மாகாண பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாயமான சர்மாவை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இந்த தேடுதல் பணியில் 90-க்கும் மேற்பட்ட பொலிசார் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த நிலையில் தேடுதல் பணியின் 4-வது நாளான நேற்று மேரிஸ்விலி பகுதியின் புறநகரில் உள்ள முட்புதர் ஒன்றிலிருந்து இறந்த நிலையில் சர்மாவின் உடல் மீட்கப்பட்டது.

இறந்த உடலை கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக விக்டோரியா மாகாண பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அவரது குடும்பத்தாருக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும், உடலை மாணவரின் சொந்த ஊருக்கு அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...