அவுஸ்திரேலியாவை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: கடற்கரை விடுதிகள் குலுங்கியது

Report Print Arbin Arbin in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவின் புரூம் நகரில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பிரபலமான கடற்கரை ரிசார்ட்கள் பல பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

சுமார் 30 ஆண்டுகளுக்கு பின்னர் அவுஸ்திரேலியாவை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அவுஸ்திரேலியாவின் புரூம் நகரின் மேற்கே உள்ளூர் நேரப்படி மாலை 3.40 மணியளவில் சுமார் 210 கிலோ மீற்றர் தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளது என ஐரோப்பிய மத்திய தரைப்பகுதி நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் பயத்தில் உறைந்த மக்கள் உயிர் பயத்தில் விடுதிகள் மற்றும் குடியிருப்புகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

மட்டுமின்றி இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தோனேசியா வரை எதிரொலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. மேலும் பிரபலமான கடற்கரை ரிசார்ட்கள் பல இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 1988 ஆம் ஆண்டு இதுபோன்ற சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அவுஸ்திரேலியாவை தாக்கியதாக கூறப்படுகிறது.

அதில் சேதமான கட்டிடங்களின் மதிப்பு 2 மில்லியன் டொலர்கள் என கூறப்பட்டது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers