குழந்தை விற்பனைக்கு, வெறும் 50 டொலர்கள்தான்: விளம்பரத்தால் சர்ச்சை!

Report Print Balamanuvelan in அவுஸ்திரேலியா

ஒரு அவுஸ்திரேலிய தம்பதி தங்கள் மகனை விற்பனை செய்வதற்காக இணையத்தில் வெளியிட்டிருந்த விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன் தினம் டார்வினைச் சேர்ந்த ஒரு பெற்றோர் அந்த விளம்பரத்தைக் கொடுத்திருந்தனர்.

குழந்தை விற்பனைக்கு, 50 டொலர்கள் மட்டுமே... குழந்தையின் பாலினம் - ஆண்.

நீங்கள் விரும்பினால் உங்கள் வீட்டுக்கே கொண்டு தருவோம், இல்லை நீங்கள் பிக் செய்ய விரும்பினாலும் சரி... என்று கூறப்பட்டிருந்த அந்த விளம்பரத்தில், அந்த தம்பதியின் முகவரியும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இணையதளம் ஒன்றின் பொம்மைகள் விற்பனை பிரிவில் இந்த விளம்பரம் கொடுக்கப்பட்டிருந்தது.

விளம்பரத்தைக் கண்ட பலரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தாங்கள் கொடுத்த விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியதை அறிந்த அந்த தம்பதி நேற்று இரவு அந்த விளம்பரத்தை நீக்கி விட்டனர்.

விளம்பரம் தொடர்பாக அந்த இணைய தளத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...