தாய் கண்முன்னே... குழந்தைக்கு நேர்ந்த கதி: இதயத்துடிப்பை நிறுத்தும் வீடியோ

Report Print Basu in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் தாய் கண்முன்னே குழந்தை ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே விழுந்து சிக்கிக் கொண்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூ சவுத் வேல்ஸில் உள்ள சைடன்ஹாம் நிலையத்திலே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. பெற்றோர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், குறித்த நிகழ்வின் சிசிடிவி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

அதில், சைடன்ஹாம் நிலையத்தில் ரயில் வந்து நிறக்க, அங்கிருந்த குட்டி பையன், ரயில் ஏற செல்கிறான், அவனுக்கு பின்னால், பிஞ்சு குழந்தையை கையில் ஏந்தி, தள்ளுவண்டியை தள்ளிய படி தாய் வருகிறார்.

சிறுவன் ரயிலில் ஏற முயன்ற போது, எதிர்பாராத விதமாக கால் வழுக்கி, ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே விழுந்து சிக்கிக் கொள்கிறான். இதைக் கண்ட தாய் பதற, அங்கிருந்த பயணிகள், ரயிலை இயக்க விடாமல் நிறுத்தி, குழந்தையை மீட்டுள்ளனர்.

விபத்தில் சிக்கிய சிறுவன், எந்த வித காயங்கள் இன்றி பத்திரமாக மீட்க்கப்பட்டுள்ளதாக உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...