குறைந்த விலைக்கு கிடைத்ததால் ப்ரீஸர் முழுவதையும் இறைச்சியால் நிறைத்த பெண்!

Report Print Balamanuvelan in அவுஸ்திரேலியா

குறைந்த விலைக்கு இறைச்சி கிடைத்தது என்பதற்காக தனது ப்ரீஸர் முழுவதையும் இறைச்சியால் நிறைத்துள்ள ஒரு பெண்ணை சக குடும்பத் தலைவிகள் பாராட்டியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் Queenslandஐச் சேர்ந்த பெண் ஒருவர் குறைந்த விலையில் கிடைத்தது என்பதற்காக பாதி ஆடு, பாதி பன்றி, கால் மாடு என தனது ப்ரீஸர் முழுவதுமே இறைச்சியால் நிறைத்துள்ளார்.

அத்துடன் அவர் அந்த இறைச்சிக்காக வெறும் 669 டொலர்கள் மட்டுமே செலவழித்துள்ளார்.

ஒரு வாரத்திற்கு தனது குடும்பத்திற்கு ஆகும் செலவு வெறும் 12.50 டொலர்கள் மட்டுமே என்றும், தான் வாங்கியிருக்கும் இறைச்சியை ஒரு வருடத்திற்கு வைத்துக் கொள்ளலாம் என்றும் அவர் கணக்கிட்டுள்ளார்.

இந்த தகவலையும் தனது ப்ரீஸரில் இறைச்சி இருக்கும் படத்தையும் அவர் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ள, சக குடும்பத்தலைவிகள் அவர் புத்திசாலித்தனமாக செய்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

அவரது முயற்சியை பாராட்டியுள்ள இன்னொரு பெண், தானும் அதே போல் செய்வதாகவும், தான் காற்று நீக்கப்பட்ட பைகளில் இறைச்சியை வைத்து பாதுகாப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் சிலர், தங்கள் வீட்டைப் பொருத்தவரையில் இது மிகவும் அதிகம் என்று தெரிவித்திருந்தாலும், மொத்தமாக பொருட்களை வாங்குபவர்களுக்கு இது லாபம்தான்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers