ஏழு வயது சிறுமியை தவறான நோக்கத்தோடு கடத்திய நபர்: அயலகத்தார் கண்ணில் பட்டதால் தவிர்க்கப்பட்ட அசம்பாவிதம்!

Report Print Balamanuvelan in அவுஸ்திரேலியா

ஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் நோக்கத்தோடு கடத்திய ஒரு நபர் தற்செயலாக அயலகத்தார் ஒருவர் கண்ணில் பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

அவுஸ்திரேலியாவின் சிட்னிக்கு அருகில் உள்ள ஒரு வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த ஒரு ஏழு வயது சிறுமியை, Christopher Irwin (34) என்னும் நபர் கையைப் பிடித்து அழைத்துச் சென்றிருக்கிறார்.

அவர் அந்த சிறுமியை அழைத்துச் செல்வதைக் கண்ட பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர், உடனடியாக அவளது உறவினர் ஒருவருக்கு தகவல் கொடுக்க, இருவருமாக அவளைத் தேடி ஓடியிருக்கிறார்கள்.

அந்த நபர் அந்த சிறுமியிடம், வா, நான் உனக்கு ஒரு விடயம் காட்டுகிறேன் என்று கூறி அழைத்துச் சென்றிருக்கிறார்.

ஆளில்லாத ஒரு வீட்டுக்குள் அவளை அழைத்துச் சென்று கதவை உட்புறமாக பூட்டியபின், வாசலில் அந்த சிறுமியின் பாட்டி வந்து விட்டதை அறிந்து, உன் பாட்டி போகும் வரை நீ சத்தம் போடாமல் இருந்தால், உன்னை விட்டு விடுகிறேன் என்று கூறியிருக்கிறார் Irwin.

ஆனால் அதற்குள் அக்கம்பக்கத்தார் உதவியுடன் அந்த வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தபோது, அந்த சிறுமியின் உடைகள் அகற்றப்பட்ட நிலையில் அவள் படுக்க வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ந்து போயிருக்கிறார் அவளது பாட்டி.

உடனடியாக அந்த மக்கள் பொலிசாருக்கு தகவல் அளித்துவிட்டு, பொலிஸ் வரும்வரை Irwinஐப் பிடித்து வைத்திருக்கிறார்கள்.

பின்னர் பொலிசார் வந்து Irwinஐ கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருக்கிறார்கள்.

அப்போது, Irwin ஏற்கனவே சிறார் பாலியல் ஆபாச படங்களை வைத்திருந்ததற்காக குற்றம் சாட்டப்பட்ட விடயம் தெரியவந்திருக்கிறது.

பத்திரிகைகளுக்கு பேட்டியளித்த அந்த சிறுமியின் பாட்டி, பத்து நிமிடங்களுக்குள் எல்லாம் நடந்து முடிந்து விட்டது, ஆனால் தன்னால் அந்த அதிர்ச்சியிலிருந்து வெளிவர முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்