கத்தியுடன் பாய்ந்து பொலிசாரை குத்த முயன்ற மர்ம நபருக்கு நேர்ந்த கதி

Report Print Basu in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் கத்தியுடன் பாய்ந்து பொலிசாரை குத்த முயன்ற மர்ம நபரை துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்.

சிட்னியின் மேற்கு, ஹர்லே செயிண்ட் பகுதியில் உள்ள ரயில் நிலையத்திற்கு அருகே மர்ம நபர் ஒருவர் கத்தியுடன் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் கத்தியுடன் இருந்த நபரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதன் போது கத்தியை பறிமுதல் செய்ய முயன்று போது மர்ம நபர் கத்தியால் பொலிசாரை குத்த பாய்ந்துள்ளார். பின்னர், பொலிசாருக்கு மிரட்டலும் விடுத்துள்ளார்.

இந்நிலையில், பாதுகாப்பு கருதி பொலிசார் மர்ம நபரை வயிற்றில் சுட்டுள்ளனர். இதில், காயமடைந்த மர்ம நபர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தை அடுத்து பொதுமக்கள் அப்பகுதியை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எனினும், இதனால் ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து அதிகாரிகள் குழு விசாரணை மேற்கொண்டு வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தாக்குதலில் ஈடுபட்ட நபர் குறித்து தற்போது வரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers