பச்சிளம் குழந்தையை தினமும் கொடுமைப்படுத்தி வந்த பெற்றோர்: நீதிமன்றத்தில் தாய் அளித்த அதிர்சசி வாக்குமூலம்

Report Print Basu in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் பிறந்து 19 மாதங்களாகியும் 2 கிலோ கூட வளராத பெண் குழந்தையின் பெற்றோருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிட்னி நகரை சேர்ந்த தம்பதிகளுக்கே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து நீதிமன்றம் வாயிலாக அறிந்த தகவலின் படி, குழந்தை பிறந்தது முதல் தாய் சைவ உணவுகளை மட்டுமே குழந்தைக்கு வழங்கி வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

இதனால், 2018 மார்ச் மாதம் நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையை தாய் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

பிறந்து 19 மாதங்களாகியும் உட்கார மற்றும் நடக்க முடியாமலும், ஒரு பல் கூட வளராமல் மூன்று மாத குழந்தை போல் உடல் நலிந்த நிலையில் குழந்தை இருந்துள்ளது. குழந்தையின் உடல்நிலையை கருத்தில் கொண்ட மருத்துவர், சம்மந்தப்பட்ட துறையிடம் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து, குழந்தையை பெற்றோர்களிடமிருந்து மீட்ட அதிகாரிகள் மருத்துவ மேற்பார்வை கீழ் ஒரு வளர்ப்பு தாயிடம் ஒப்படைத்துள்ளனர்.

நீதிமன்ற விசாரணையில் குழந்தையின் தாய் கூறியதாவது, எங்கள் குடும்பத்தில் அனைவருமே சைவம், அதுவே குழந்தையின் வளர்ச்சியின்மைக்கு காரணம் என தெரிவித்துள்ளார். தான் வேலைக்கு செல்வதாகவும், மனைவியே குழந்தை பார்த்துக்கொண்டதாக குழந்தையின் தந்தை தெரிவித்துள்ளார்.

பெற்றோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் இருவருக்கும் குழந்தையை கொடுமைப்படுத்திய குற்றத்திற்காக ஐந்து ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்