அவுஸ்திரேலியாவில் துப்பாக்கி சூடு: பொதுமக்கள் பலர் காயம்!

Report Print Vijay Amburore in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடத்தப்பட்டுள்ள துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் பலர் காயமடைந்திருப்பதாக பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மெல்போர்ன் நகரில், சாப்பல் ஸ்ட்ரீட் மற்றும் மாவெர்ன் சாலைப்பகுதி அருகே உள்ள இரவு நேர கேளிக்கை விடுதிக்கு வெளியில், உள்ளுர் நேரப்படி 3.20 மணிக்கு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதில் விடுதியில் காவலாளியாக பணிபுரிந்து வரும் ஒருவரின் முகத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதாகவும், மற்றொருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மெல்போர்ன் ஆல்ஃபிரட் மருத்துவமனையில் 28 வயதான மனிதர் மற்றும் இன்னும் அடையாளம் காணப்படாத மற்றொருவர் சிக்கலான நிலையில் தங்கள் உயிருக்கு போராடுவதாக கூறப்படுகிறது.

29 மற்றும் 50 வயதுடைய இரண்டு பேர் லேசான காயங்களுடன் நல்ல நிலைமையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் பொதுமக்கள் பலர் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டிருக்கலாம் என விக்டோரியா பொலிஸ் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடந்ததிலிருந்து அப்பகுதியின் நிலை குறித்து பொலிஸார் எந்த தகவலும் இதுவரை வெளியிடவில்லை. ஆனால் சில உள்ளூர் ஊடகங்கள் 4 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதாக தெரிவித்து வருகின்றன.

திருடப்பட்ட Porsche Cayenne காரில் வந்தபடியே மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்