உயிருக்கு போராடும் சிறுவன்... குடியுரிமை மறுப்பு: நாடுகடத்தப்படும் அச்சுறுத்தலில் குடும்பம்

Report Print Arbin Arbin in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமை மறுக்கப்பட்டதால் நோயாளியான சிறுவனுடன் அயர்லாந்து குடும்பம் ஒன்று நாடுகடத்தப்படும் அச்சுறுத்தலில் தவித்து வருகிறது.

அயர்லாந்து நாட்டவர்களான கிறிஸ்டின் மற்றும் அந்தோனி ஹைட் தம்பதிகள் கடந்த 10 ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவில் உள்ள சீமோர், விக்டோரியாவில் குடியிருந்து வருகின்றனர்.

இவர்களது 3 வயது பிள்ளை டாராக் ஹைட் சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் எனும் நோயால் அவதிப்பட்டு வருகிறார்.

டாராக் ஹைட் பிறப்பதற்கு 2 வாரங்கள் முன்னர் அவுஸ்திரேலிய நிர்வாகமானது நிரந்தர குடியுரிமை கோரி விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது.

இந்த நிலையில் டாராக் ஹைட் பிறந்து, குழந்தைக்கு 8 வாரமானபோது சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் நோய் தாக்கியுள்ளது.

அதே வேளை, நிரந்தர குடியுரிமைக்கான மருத்துவ சோதனைக்கு கிறிஸ்டின் மற்றும் அந்தோனி ஹைட் உட்படுத்தப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அவுஸ்திரேலியா உள்விவகார அமைச்சகம் குறித்த தம்பதிகளின் நிரந்தர குடியுரிமை விண்ணப்பத்தை முதன்முறையாக நிராகரித்துள்ளது.

மேலும் சிறுவன் டாராக் ஹைட் தீவிரமான மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்த நேரிடும் என்பதாலும், அது அவுஸ்திரேலிய மக்களின் வரிப்பணத்தில் இருந்து செலவாகும் என்பதால், அது அவர்களை பாதிக்கும் எனவும் விளக்கம் அளித்துள்ளது.

இதனிடையே கிறிஸ்டின் மற்றும் அந்தோனி ஹைட் தம்பதிகள் மேல்முறையீடு செய்ததுடன், தங்களின் பிள்ளையின் நிலை தீவிரமானதல்ல எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து எதிர்வரும் 30 ஆம் திகதி நிர்வாக தீர்ப்பாயத்தின் முடிவுக்காக காத்திருக்க முடிவு செய்துள்ளனர்.

ஆனாலும், உள்விவகார அமைச்சகம் மேற்கொள்ளும் முடிவுகளை மாற்றும் அதிகாரம் குறித்த தீர்ப்பாயத்திற்கு இல்லை என கூறப்படுகிறது.

அயர்லாந்து செல்ல தாங்கள் விரும்பவில்லை எனவும், அங்கே தங்களுக்கான எதுவும் இல்லை எனவும், அவுஸ்திரேலிய அரசு சாதகமான முடிவு மேற்கொள்ளும் என நம்புவதாகவும் கிறிஸ்டின் மற்றும் அந்தோனி ஹைட் தம்பதிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...