திருமண ஆடையுடன் கடலுக்குள் குதித்த மணமக்கள்: வைரலாகும் வீடியோ!

Report Print Vijay Amburore in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு ஜோடி, திருமண ஆடையுடன் கடலுக்கடியில் திருமணம் செய்துள்ள வினோதமான வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த கடல் உயிரியல் நிபுணரும், ஆழ்கடல் ஆய்வாளருமான ஜூல்ஸ் கேசி கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய திருமணத்தை ஆழ்கடலில் நடத்தியுள்ளார்.

இதனை உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று வீடியோவாக படம்பிடித்துள்ளது.

ஜோடியினர் உண்மையிலே நீருக்கு அடியில் திருமணம் செய்துகொண்டனர். ஆனால் இது சட்டபூர்வமானது கிடையாது. தரைக்கு மேல் நடந்தால் மட்டுமே அந்த திருமணம் செல்லுபடியாகும் என்பதால், இந்த வாரத்தில் தம்பதியினர் மீண்டும் திருமணம் செய்ய உள்ளனர்.


மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்