வலியும் காயங்களும் நாளும் துரத்துகிறது... கூட்டு வன்கொடுமைக்கு இரையான மகள்: உருக்கமான கடிதத்தை வெளியிட்ட தாயார்

Report Print Arbin Arbin in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் கூட்டு வன்கொடுமைக்கு இரையாகி, பின்னர் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் கைப்பட எழுதிய கடிதத்தை அவரது தாயார் வெளியிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கூட்டு வன்கொடுமைக்கு இரையான 15 வயது சிறுமி, அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தற்கொலை செய்துகொண்டார்.

விக்டோரியா மாகாணத்தில் உள்ள தெற்கு ஸ்பிரிங்வேல் பகுதியில் குறித்த பதறவைக்கும் சம்பவம் கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அரங்கேறியது.

சிறுமி கேசிடி ட்ரெவன் தற்கொலை செய்துகொண்ட பின்னர், அவரது அறையை இதுவரை திறந்து பார்த்ததே இல்லை என கூறும், தாயார் லிண்டா ட்ரெவன்,

வேறு பகுதிக்கு குடியிருப்பை மாற்றுவதால், சம்பவத்தன்று கேசிடியின் அறையில் சென்று அவர் பயன்படுத்திய பொருட்களை ஒவ்வொன்றாக தூசு தட்டியுள்ளார்.

இந்த நிலையில் கேசிடி கைப்பட எழுதிய அந்த உருக்கமான கடிதம் லிண்டாவிடம் சிக்கியுள்ளது.

அதில், எனக்கு அறிமுகமல்லாத பலர் பேஸ்புக் மூலம் தம்மை தொடர்புகொண்டு, மிகவும் அருவருப்பாக திட்டுகின்றனர்.

இவர்களால் குடியிருப்பை மாற்றினேன், பாடசாலையை மாற்றினேன், இருப்பினும் அருவருப்பாக பேசுபவர்களின் நடுவிலேயே சிக்க வேண்டிய நிலை வருத்தமளிக்கிறது.

கூட்டு வன்புணர்வுக்கு இரையானேன். அச்சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்த பின்னரும், அதன் வலியும் காயங்களும் நாளும் துரத்துகிறது.

வெலிங்டன் பிரதேசம் பாதுகாப்பானது, அருவருப்பாக கிண்டல் செய்பவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதே நிதர்சனம் என அந்த கடிதத்தில் கேசிடி உருக்கமாக பதிவு செய்துள்ளார்.

கேசிடி பாலியல் பலாத்கார விவகாரத்தில் தொடர்புடைய நபர்கள் மீது இதுவரை பொலிசார் எந்த வழக்கும் பதியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers