இளம் கோடீஸ்வரரின் அசத்தல் விளம்பரம்: 52,000 டொலர் சம்பளம் கொடுத்து இலவசமாக உலகத்தை சுற்றிப்பார்க்க வாய்ப்பு

Report Print Vijay Amburore in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவை சேர்ந்த 26 வயது இளம் கோடீஸ்வரர், $52,000 டொலர் சம்பளத்தில் தன்னுடன் சேர்ந்து உலகை சுற்றிப்பார்க்க பணியாளர் வேண்டும் என வினோதமான விளம்பரம் கொடுத்துள்ளார்.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த 26 வயதான மேத்யூ லெப்ரே என்பவர், தனது மின் வணிகம் மற்றும் வர்த்தக பயிற்சி நிறுவனங்களை பெரிதுபடுத்துவதற்காக உலகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

கடந்த ஆண்டு ஜப்பான், துபாய், ஹவாய் மற்றும் தனது சொந்த நகரமான சிட்னி ஆகியவற்றில் மேத்யூ சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதோடு மட்டுமில்லாமல் நிறுவனங்களுக்கான வணிக விரிவுரையையும் அவர் வழங்கி வருகிறார்.

தற்போது அவரது வேலையை உலகம் முழுவதும் கவனித்துக்கொள்ள ஒரு தனி பணியாளர் தேவை என விளம்பரம் கொடுத்துள்ளார். அந்த பணியாளருக்கு குறைந்தபட்சம் மாதத்திற்கு $ 52,000 டொலர்கள் வரை வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

சம்பளம் நபரின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது. பெண்கள் என்றால் அவர்களுக்கு என்று தனியாக தங்கும் விடுதி அறை எடுத்துக்கொடுக்கப்படும். அதேபோல உடல் நல காப்பீடும் எடுத்து கொடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

தற்போது மாதத்திற்கு $120,000 டொலர்கள் வரை சம்பாதிக்கும் மேத்யூவின் இந்த அறிவிப்பை பொதுமக்கள் பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers