16 வயது சிறுமிக்கு எச்.ஐ.வியை பரப்பிய 37 வயது நபர்!

Report Print Vijay Amburore in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் பாலியல் உறவின் மூலம் 16 வயது சிறுமிக்கு எச்.ஐ.வி நோய்த்தொற்றினை பரப்பிய நபர் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த 37 வயதான நூர் பஞ்ச்ஷிரி என்பவர், கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் 16 வயதுடைய சிறுமி மற்றும் அவருடைய 14 வயது தோழியுடன் ஒளிந்து பிடித்து விளையாடி கொண்டிருந்துள்ளார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து அந்த 16 வயது சிறுமியை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் உறவு வைத்துள்ளார்.

அடுத்த சில நாட்களில் அந்த சிறுமிக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை மேற்கொண்டனர்.

அங்கு சிறுமி எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் நூர் பஞ்ச்ஷிரியுடன் சிறுமி உறவு வைத்திருந்தது தெரியவந்தது.

ஆரம்பத்தில் இதற்கு நூர் பஞ்ச்ஷிரி மறுப்பு தெரிவித்தாலும், மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

இந்த வழக்கானது இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, நூர் பஞ்ச்ஷிரி தனக்கு எச்.ஐ.வி இருப்பதை மறைத்து சிறுமியுடன் உறவு வைத்ததும், உரிய மருந்துகளை எடுத்துக்கொள்ள தவறியதும் தெரியவந்தது.

இதனையடுத்து நூர் பஞ்ச்ஷிரி குற்றவாளி என அறிவித்த நீதிபதி, தண்டனை விவரத்திற்கான திகதியினை மாற்றி வைத்து உத்தரவிட்டார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers