ராட்சத ராட்டினத்தில் மோதிய விமானம்: பாதிக்கப்பட்ட இருவர் எடுத்துள்ள நடவடிக்கை

Report Print Balamanuvelan in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் ஒரு இளம்பெண் ராட்சத ராட்டினம் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தபோது, சிறிய ரக விமானம் ஒன்று அதன் மீது மோத, மோதியவரும், ராட்டினத்தில் பயணித்த அந்த பெண்ணும் வித்தியாசமான நோக்கங்களுக்காக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

2011ஆம் ஆண்டு ராட்டினம் ஒன்றில் தனது தம்பியுடன் சுற்றிக் கொண்டிருந்தார் Amber Christine Arndell.

அப்போது வீடியோ எடுத்துக் கொண்டிருந்த Amber, ஒரு சிறிய ரக விமானம் வருவதைக் கண்டார்.

அந்த விமானம் நேரடியாக வந்து Amber பயணித்த அந்த ராட்டினம் மீதே மோத அவர் கடும் அதிர்ச்சியில் கூக்குரலிட்டிருக்கிறார்.

அந்த விபத்து தன்னை மனோரீதியாக பாதித்ததாக அவர் அந்த விமானத்தை ஓட்டிய Paul Clarendon Cox என்பவர் மீது தற்போது வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதே நேரத்தில் Paul Clarendon Cox, அந்த ராட்டினத்தை அந்த இடத்தில் நிறுவிய நகர கவுன்சில் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

அது தான் வழக்கமாக பயணிக்கும் பாதை என்றும், முன்னர் ராட்டினம் பொருத்தப்பட்டிருந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்கு ராட்டினத்தை மாற்றி நிறுவியுள்ளதாகவும் Paul வழக்கு தொடர்ந்துள்ளார்.

சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லையென்றாலும், வெளியாகியுள்ள புகைப்படங்களில் ராட்டினத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் விமானத்தைப் பார்ப்பதற்கு அச்சமாகத்தான் உள்ளது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers