3 லட்சம் உயிர்களை காவு வாங்கிய பெருவெள்ளம்: சோகத்தில் மக்கள்

Report Print Arbin Arbin in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் பெருவெள்ளத்தில் சிக்கி இதுவரை 3 லட்சத்திற்கும் மேலான உயிரினங்கள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் கடந்த சில ஆண்டுகளாக நீடித்த வெப்பநிலை முற்றி, இந்த ஆண்டு வடமேற்குப் பகுதியில் வறட்சி அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அதிகமான பாதிப்புக்குள்ளான அவுஸ்திரேலியா மீண்டும் கவலையில் ஆழ்ந்துள்ளது. அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக இல்லாத மழை பெய்துள்ளது.

இதன் காரணமாகக் குயின்ஸ்லாந்து பகுதியே நீரில் மிதக்கிறது. அதிகப்படியான வெள்ளம் காரணமாக சாலைகளும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டு அம்மக்கள் முடங்கிப் போயுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் ஒரு பக்கம் வறட்சி, மறுபக்கம் வெள்ளம் என ஒரே நேரத்தில் இரண்டு முரண்பாடான காலநிலை நிலவிவருகிறது.

இந்த வெள்ளத்தால், வன உயிரினங்கள் அதிகமாகப் பாதிப்புகளைச் சந்தித்திருக்கின்றன. இதனால் 3 லட்சம் உயிரினங்கள் உயிரிழந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

ஆற்றில் இருந்த முதலைகளும் வெளியில் நீந்திக்கொண்டிருப்பதால் மக்கள் வெளியேறுவதற்கு அச்சப்பட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

இதுவரை 20,000 வீடுகளுக்கும் மேல் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. மொத்த சேதம் 213 மில்லியன் டொலர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

அதிகமாக இறந்து கிடக்கும் உயிரினங்களை உடனே அப்புறப்படுத்தாவிட்டால் மக்களுக்கு நோய்கள் பரவும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

அதிகமாகச் சாலைகள் துண்டிக்கப்பட்டு கிடப்பதால் மீட்பு நடவடிக்கைகளில் தோய் ஏற்பட்டுள்ளதாகவும் சில பகுதிகளுக்குச் செல்ல அதிகாரிகள் அஞ்சுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்படும் என அவுஸ்திரேலிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers