பணத்துக்காக தான் பெண்கள் டேட்டிங் செய்றாங்க... உண்மையான காதல் எனக்கு வேணும்! புலம்பும் பணக்கார இளைஞர்

Report Print Raju Raju in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் மாதம் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டும் இளைஞர், காதலர் தினத்தில் தன்னை உண்மையாக நேசிக்கும் பெண் தன்னுடன் இல்லையே என வருத்தம் தெரிவித்துள்ளார்.

சிட்னியை சேர்ந்தவர் மேத்யூ லெப்ரி (26). இவர் ஓன்லைன் பிசினஸ் மூலம் மாதம் £66,000 வருமானம் ஈட்டி வருகிறார்.

இந்நிலையில் தன்னை டேட்டிங் செய்யும் பெண்கள் தன்னிடம் உள்ள பணத்துக்காக மட்டுமே தன்னிடம் பழகுவதாக கூறியுள்ளார்.

மேத்யூ கூறுகையில், என் மீது உண்மையான அன்பு கொண்டு பெண்கள் யாரும் டேட்டிங் செய்யவில்லை.

என் வங்கி கணக்கில் உள்ள பணத்துக்காக தான் என்னுடன் பழகுகிறார்கள். எனக்காக மட்டும் என்னிடம் பழகக்கூடிய பெண்ணை தேடி கொண்டிருக்கிறேன்.

என் வெற்றியின் மூலம் நான் உணர்ந்தது என்னவெனில், பணத்தால் உண்மையான காதலையும், குடும்ப பாசத்தையும் வாங்க முடியாது என்பது தான்.

எனக்கான பெண்ணை வாழ்க்கையில் சந்தித்தால் அவருடன் நான் செட்டில் ஆக வேண்டும் என்பதே என் எண்ணம்.

காதலர் தினம் நெருங்கும் நிலையில் என் வாழ்க்கையில் உண்மையான மற்றும் முக்கியமான உறவை நான் சந்திப்பது தான் அந்த நாளின் உண்மையான அர்த்தத்தை எனக்கு கொடுக்கும் என கூறியுள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers