உதட்டில் அந்த எழுத்தை பச்சை குத்திய பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்!

Report Print Santhan in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் உதட்டில் KFC என்று பச்சை குத்தியதால், அவருக்கு வாழ்நாள் முழுவதும் சிக்கன் இலவசமாக கிடைக்கவுள்ளது.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னைச் சேர்ந்தவர் Tabatha Andrade. 20 வயதான இவருக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்குமாம்.

அதிலும் KFC சிக்கன் என்றால் அதிகம் விரும்பி சாப்பிடுவாராம். இதன் காரணமாகவே அவர் தன்னுடைய உதட்டி KFC என்று பச்சை குத்தியுள்ளார்.

இதை அறிந்த KFC அந்த பெண்ணிற்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், எனக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் KFC சிக்கன் என்றால் உயிர்.

தினமும் KFC சிக்கன் உண்பேன். என் வீட்டு நாய்க்குக் கூட நக்கட்ஸ் என்றுதான் பெயர் வைத்திருக்கிறேன்.

அந்த அளவிற்கு சிக்கன் மீது விருப்பம். என் வீட்டில் முதல் முறையாக காட்டிய போது அது போலியான ஸ்டிக்கர் என்றே நினைத்தார்கள்

பின் அவர்களுக்கு உண்மை தெரிந்ததும் எதுவும் சொல்லவில்லை. எனக்கு வலியும் அதிகம் ஏற்படவில்லை.

சாதரணமாகவே உணர்ந்தேன். எனக்கு இதில் கிடைத்த பேரானந்தம் என்னவென்றால் KFC சிக்கன் இனி வாழ்நாள் முழுவதும் இலவசமாக கிடைக்கப்போகிறது என்பது தான் என்று மிகுந்த மகிழ்ச்சியில் கூறியுள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers