கணவருடன் தொடர்பு... இளம் பெண்ணை உயிருடன் கொளுத்திய பெண்: வெளியான பின்னணி

Report Print Arbin Arbin in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் தமது கணவருடன் படுக்கையை பங்கிட்டதாக கூறி அவரது மனைவி இளம் பெண்ணை உயிருடன் கொளுத்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரிலேயே தொடர்புடைய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

இங்கு குடியிருக்கும், தற்போது 33 வயதான Dana Vulin தமக்கு நேர்ந்த கொடூர சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

சமூக வலைதளத்தில் திடீரென்று ஒருமுறை இவருக்கு முகம் தெரியாத நபர் ஒருவரிடம் இருந்து குறுந்தகவல் வந்துள்ளது.

அதை விளையாட்டாக எடுத்துக் கொண்ட டானா தமது சகோதரியிடமும் காண்பித்து, இருவரும் அதை கேலி செய்துள்ளனர்.

ஆனால் தொடர்ந்து டானாவுக்கு நெருக்கமான பலருக்கும் அது போன்ற குறுந்தகவல் பகிரப்பட்டுள்ளது.

ஒருகட்டத்தில் டானாவின் தாயாரின் குடியிருப்பு முகவரிக்கு காதல் கடிதங்களும் பூக்களும் தொடர்ந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது டானாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யார் அனுப்புகிறார்கள் என்று தெரியாத நிலையில், எச்சரிக்கையுடன் இருக்கவே டானா முடிவு செய்துள்ளார்.

இது தொடர்ந்து 5 ஆண்டுகள் நீண்டுள்ளது. ஆனால் 2012 பிப்ரவரி 16 ஆம் திகதி அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்த போதுதான் இதன் காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது.

சம்பவத்தன்று டானாவின் குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்த Natalie Dimitrovska என்பவர், என் கணவரை எங்கே மறைத்து வைத்திருக்கிறாய் என கேட்டு கடும் வாக்குவாதத்தில் இறங்கியுள்ளார்.

ஆனால் அவரது குற்றச்சாட்டுகள் எதையும் அறியாத டானா பலமுறை மறுத்தும் ஆத்திரம் அடங்காத அந்த பெண்மணி,

திடீரென்று தாம் கொண்டு வந்த எரி சாராய போத்தலை டானா மீது கொட்டியுள்ளார். பின்னர் நெருப்பு வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

இந்த விவகாரத்தில் டானாவின் 85 சதவிகித உடலும் நெருப்பால் வெந்து போனது. டானாவின் அலறல் கேட்டு அவரது தோழி ஒருவர் துரிதமாக செயல்பட்டு இவரை மீட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் Dimitrovska கைது செய்யப்பட்டு விசாரணை முடிவடைந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு 17 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.

டானாவில் உடலில் மொத்தம் 200-கும் அதிகமான அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. ஓராண்டுக்கும் மேலாக மருத்துவனையில் செலவிட்டுள்ளார் டானா. ஆனால் டானா மீதான இந்த விவகாரத்தில் Dimitrovska தவறாக புரிந்து கொண்டார் என்றே விசாரணையில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...