பிரபல தமிழ் ஜோதிடர் ஒருவர் வெளிநாட்டு பொலிசாரால் கைது: வெளியான பகீர் பின்னணி

Report Print Arbin Arbin in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் சிறுமி ஒருவரை பலாத்காரம் செய்த வழக்கில் இந்தியாவின் பிரபல ஜோதிடர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

14 வயது சிறுமி ஒருவரை பலாத்காரம் செய்த வழக்கிலேயே 31 வயதான அர்ஜுன் முனியப்பன் என்ற ஜோதிடரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சிட்னியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிசாரால் அர்ஜுன் முனியப்பன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிங்கப்பூருக்கு தலைமறைவாக இருந்த நிலையிலேயே பொலிசாரின் எச்சரிக்கையை அடுத்து அதிரடியாக ஜோதிடர் முனியப்பன் கைதாகியுள்ளார்.

சிறுமிகளுக்கு இலவசமாக ஜோதிடம் பார்க்கப்படும் என இவரது விளம்பரத்தை நம்பி அணுகிய ஒரு சிறுமியை பலாத்காரம் செய்ததாக நியூ சவுத் வேல்ஸ் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சிட்னி நகரின் லிவர்பூர் பகுதியில் தனியாக ஜோதிட நிலையம் ஒன்றை அர்ஜுன் முனியப்பா நடத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...