அவுஸ்திரேலியாவில் உள்ள தூதரகங்களுக்கு வந்த மர்ம பார்சலால் பரபரப்பு

Report Print Kabilan in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு வந்த மர்ம பார்சலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இத்தாலி, ஜேர்மனி, இந்தியா, ஜப்பான், பிரித்தானியா, குரோஷியா, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், நியூசிலாந்து, பாகிஸ்தான், சியாசிஸ்ல், கிரீஸ் மற்றும் கொரியா ஆகிய நாடுகளின் தூதரக அலுவலகங்கள் உள்ளன.

இந்நிலையில் இன்று காலையில் இவற்றில் பல தூதரகங்களுக்கு மர்ம பார்சல்கள் வந்துள்ளன. இதனையறிந்த அதிகாரிகள் அலுவலகத்தை விட்டு சிதறி ஓடினர்.

அதனைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினர் மற்றும் அவசர சேவை பிரிவினர் ஆகியோர் தயாராக இருந்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் நடத்தினர்.

அதன் பின்னர் மர்ம பார்சல்கள் கைப்பற்றப்பட்டன. இதுகுறித்து அவுஸ்திரேலிய பொலிசார் கூறுகையில், ‘அவசர சேவைகளில் கலந்து கொள்வதன் மூலம் மர்ம பார்சல்கள் பரிசோதிக்கப்படுகின்றன.

சம்பவங்களை சுற்றியுள்ள சூழ்நிலைகள் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றன’ என தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers