ஏ.சி-யில் ஒளிந்திருந்த 29 அடி நீள பாம்பு: எலி வால் என நினைத்த தம்பதி.. அடுத்து நடந்த சம்பவத்தின் வீடியோ

Report Print Raju Raju in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் கொடிய விஷமுள்ள பாம்பு ஏ.சி-யில் ஒளிந்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெல்போனை சேர்ந்தவர் டேனி மேரோக், இவர் தனது மனைவி டெனிஸ் உடன் தனது வீட்டு படுக்கையறையில் இருந்தார்.

அப்போது அங்கிருந்த ஏ.சி-யின் பின்புறம் சிறிய வால் போன்று ஒரு விடயம் தென்பட்டது. சரி, அது எலியின் வாலாக தான் இருக்கும் என கருதி டேனி அருகில் சென்று பார்த்த போது அதிர்ந்து போனார்.

காரணம் அவுஸ்திரேலியாவில் உள்ள கொடிய விஷப்பாம்புகளில் ஒன்றான tiger snake வகை பாம்பு அங்கு இருந்தது.

இதையடுத்து பதறிபோன தம்பதி பாம்பு பிடிப்பதில் வல்லவரான ஸ்டீவி என்பவருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த ஸ்டீவி மிகுந்த போராட்டத்துக்கு பின்னர் பாம்பை பிடித்தார். அவர் கூறுகையில், பாம்பானது 29 அடி நீளத்தில் இருந்தது.

சுவற்றில் இருந்த ஓட்டை வழியாக உள்ளே வந்துள்ளது.

நல்லவேளையாக ஏ.சி-யின் உள்ளே யாரும் கை வைத்து பார்க்கவில்லை, அப்படி செய்திருந்தால் விபரீத சம்பவம் நடந்திருக்கும் என கூறியுள்ளனர்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers