கிறிஸ்துமஸ் மரத்திலிருந்து சீறிய மலைப்பாம்பு: அதிர்ச்சி வீடியோ

Report Print Balamanuvelan in அவுஸ்திரேலியா

கிறிஸ்துமஸ் மரத்தை ரசித்துக் கொண்டிருந்த ஒரு அவுஸ்திரேலியக் குடும்பத்தினர் மரத்தில் தொங்க விடப்பட்டிருந்த அலங்காரப் பொருட்களின் நடுவிலிருந்து சீறிய ஒரு பாம்பைக் கண்டு அதிர்ச்சியுற்றனர்.

உடனடியாக அவர்கள் அப்பகுதியில் பாம்பு பிடிப்பதில் பிரபலமானவரான ஜாக் ஹோகன் (19) என்பவரை அழைத்தனர்.

விரைந்து வந்த ஜாக் அந்த பாம்பை ஆராய்வதற்காக அந்த கிறிஸ்துமஸ் மரத்தின் அருகில் செல்ல அவரைக் கண்டும் சீறியது அந்த பாம்பு.

பின்னர் லாவகமாக அந்த பாம்பை பிடித்த ஜாக், அது ஒரு மலைப்பாம்பு என்று தெரிவித்தார்.

மலைப் பாம்புகள் விஷமற்றவை என்றாலும், அவை கொத்தினால் படுகாயம் ஏற்படலாம், சில நேரங்களில் இரத்தப்போக்கு அதிகம் ஏற்பட்டு மரணம் ஏற்படலாம்.

கிறிஸ்துமஸ் மரத்திற்குள் பாம்பு மறைந்திருந்த அதிர்ச்சியில் உறைந்துபோன அந்த குடும்பத்தினர், உடனடியாக அந்த மரத்தை அகற்றிவிட முடிவு செய்துள்ளனர்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers