புயலுக்கு அஞ்சி பாம்பிடமே தஞ்சம் புகுந்த தவளைகள்: ஆச்சரிய வீடியோ

Report Print Balamanuvelan in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் அடித்த புயலுக்கு அஞ்சி ஒரு கூட்டம் தவளைகள் பாம்பு ஒன்றிடமே தஞ்சம் புகுந்ததைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Paul மற்றும் Anne Mock ஆகியோரின் குடும்பம் அவுஸ்திரேலியாவின் Kununurra கிராமத்திலுள்ள தங்கள் வீட்டிலிருக்கும்போது அடித்த புயலில், 70 மில்லிமீற்றர் மழை கொட்டியதில் அவர்களது நீர்த்தேக்கம் நிரம்பி வழிந்தது.

தங்கள் நீர்த்தேக்கம் உடைந்துவிடுமோ என்ற அச்சத்தில் அதை பார்வையிடுவதற்காக Paul மழைக்கும் மின்னலுக்கும் நடுவில் வீட்டிலிருந்து வெளியே வந்தார். அப்போது ஆயிரக்கணக்கான தவளைகள் நீர்த்தேக்கத்தைச் சுற்றிலும், புல்லின் மேலும் அமர்ந்திருப்பதைக் கண்டார்.

அப்போது அவர் கண்ட ஒரு காட்சி அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியதோடு, ஆச்சரியப்படுத்தவும் செய்தது.

3.5 மீற்றர் நீளமுள்ள ஒரு மலைப்பாம்பின் மேல், சுமார் 10 தவளைகள் அமர்ந்திருந்தன.

பாம்பு ஊர்ந்து சென்ற நிலையிலும் அவை சற்றும் அஞ்சாமல் அதன் மேலேயே அமர்ந்திருந்தன.

அதை வீடியோ எடுத்த Paul விட்டரில் பதிவேற்ற அந்த வீடியோ வைரலானது.

அந்த வீடியோவைக் கண்ட தவளைகள் இயல் நிபுணரான Jodi Rowley, உண்மையில் அவை ஆண் தவளைகள் என்றும், அவை அந்த மலைப்பாம்புடன் உறவு கொள்ள முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளது மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்