கழிவறையில் இருந்த பெண்..தலையை தூக்கி எட்டிபார்த்த பாம்பு..அடுத்து நடந்த சம்பவம்

Report Print Raju Raju in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் கழிவறையில் பெண்ணொருவர் உட்கார்ந்திருந்த நிலையில் அங்கு ஒரு பாம்பு இருந்தது, அப்பெண்ணை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மெல்போர்னை சேர்ந்த பெண்ணொருவர் தனது வீட்டின் கழிவறையில் உட்கார்ந்திருந்தார்.

அப்போது விஷப்பாம்பு ஒன்று பின்னால் இருந்து வந்த நிலையில் பெண் எதிரே வந்து தனது தலையை தூக்கி எட்டி பார்த்தது.

இதை பார்த்து பயத்தில் அலறிய அப்பெண் உடனடியாக பாம்பு பிடிப்பதில் வல்லவரான ஒருவரை அங்கு வரவழைத்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த பாம்புபிடிப்பவர் அங்கிருந்த பாம்பை லாவகமாக பிடித்தார்.

இது குறித்த தகவலை அவர் புகைப்படத்துடன் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

பாம்பானது கழிவறையின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் ஒளிந்திருக்கலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers