படுக்கையில் இளம்பெண் அருகில் படுத்திருந்த பெரிய பாம்பு: தூங்கி எழுந்து பெண் செய்த செயல்..வைரல் வீடியோ

Report Print Raju Raju in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் இளம்பெண்ணின் படுக்கையில் பெரிய பாம்பு இருப்பதை கண்ட அவர் தனி ஆளாக நிலைமையை சமாளித்துள்ளார்.

குயின்ஸ்லாந்தை சேர்ந்தவர் கட்ஜனா ஷோயர் (25). இவர் தனது வீட்டில் உள்ள படுக்கையில் தூங்கி கொண்டிருந்தார்.

தூங்கி எழுந்த போது கட்ஜனாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் படுக்கையில் அவரருகில் மிக நீளமான விஷப்பாம்பு இருந்துள்ளது.

இதையடுத்து பாம்பு பிடிப்பவர்களுக்கு போன் செய்வதற்கு பதிலாக, தனியாக நிலைமையை சமாளிக்க முடிவெடுத்தார் கட்ஜனா.

அதன்படி மீன்பிடிக்கும் தூண்டிலை வைத்து பாம்பை குப்பை தொட்டிக்குள் நுழையவைத்து அதை மூடினார் கட்ஜனா.

பின்னர் குப்பை தொட்டியை எடுத்து கொண்டு போய் காட்டு பகுதியில் பாம்பை விட்டுள்ளார்.

இது குறித்து கட்ஜனா கூறுகையில், தூங்கி எழுந்ததும் என்னருகில் பெரிய பாம்பு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தேன், என் இதயமே ஒரு நிமிடம் நின்றுவிட்டது.

என்னை அந்த பாம்பு சாப்பிட நினைத்ததை நான் உணர்ந்தேன். பின்னர் தைரியமாக செயல்பட்டு பாம்பை காட்டில் விட்டேன்.

என் வீட்டு படுக்கையறை ஜன்னல் வழியாக பாம்பு நுழைந்திருக்கலாம் என கருதுகிறேன்.

இது என் வாழ்நாளில் ஏற்பட்ட மிக பயங்கரமான அனுபவம் என கூறியுள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers