3 மாதங்களில் அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட பாரிய மாற்றம்

Report Print Givitharan Givitharan in அவுஸ்திரேலியா

பெற்றோலியத்திலிருந்து தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பைகள் மக்குவதற்கு நூற்றுக்கணக்கான வருடங்கள் ஆகின்றது.

இதனால் சூழலுக்கு பாரிய பாதிப்பு ஏற்படுவதாக ஏற்கணவே கடுமையாக எச்சரிக்கப்பட்டு வந்தன.

இதனை அடுத்து பல நாடுகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு பகுதி அளவில் தடை விதிக்கப்பட்டு வந்தது.

எனினும் இத் தடைகள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஆனால் அவுஸ்திரேலியா இதில் பாரிய வெற்றி கண்டுள்ளது.

கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் அங்குள்ள இரு பாரிய சுப்பர் மார்ட்கட்கள் பிளாஸ்டிக் பை பாவனையை முற்றாக நிறுத்தியிருந்தன.

இத் தடையானது குறித்த சுப்பார்மார்க்கட்டின் அனைத்து கிளைகளிலும் கண்டிப்பான முறையில் பின்பற்றப்பட்டு வந்தன.

இனால் தற்போது சுமார் 80 சதவீதமான பிளாஸ்டிக் பாவனை அவுஸ்திரேலியாவில் குறைவடைந்துள்ளதாக தற்போதைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவலை த கார்டியன் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers