கலைந்த கனவு! திருமணமான நான்கு மாதத்தில் உயிரிழந்த கர்ப்பிணி பெண்: கோமா நிலைக்கு சென்ற கணவர்

Report Print Raju Raju in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ள நிலையில் அவரின் கணவர் கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

கேத்ரீன் (23) என்ற பெண்ணுக்கும் பிரான்சோ (25) என்ற இளைஞருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்த நிலையில் இரட்டை குழந்தைகளை வயிற்றில் சுமந்து கேத்ரீன் கர்ப்பமாக இருந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு கேத்ரீனும், பிரான்சோவும் சிட்னியில் உள்ள Orchard Hills பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தனர். காரை பெண் ஓட்டுனர் ஓட்டினார்.

அப்போது எதிரில் வந்த கார் ஒன்று இவர்கள் கார் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் கர்ப்பிணியான கேத்ரீன், அவர் வயிற்றில் இருந்த குழந்தைகள் மற்றும் பெண் ஓட்டுனர் உயிரிழந்தனர்.

கேத்ரீன் கணவர் பிரான்சோவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் கோமா நிலையில் உள்ளார்.

எதிரில் வந்த காரை ஓட்டிய நபரும் படுகாயத்துடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.

இதோடு அங்கிருந்த இரண்டு வாகனங்கள் சிறிதளவு சேதமடைந்துள்ள நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers