அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக பதவியேற்கிறார் ஸ்காட் மோரிசன்

Report Print Kabilan in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவின் இடைக்கால பிரதமராக பொருளாளர் ஸ்காட் மோரிசன் பதவி ஏற்க உள்ளார்.

அவுஸ்திரேலியாவின் ஆளும் கட்சியான லிபரலில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலால், அடிக்கடி புதிய பிரதமர்கள் பதவி ஏற்று வருகின்றனர். தற்போது பிரதமராக பதவி வகித்து வரும் மால்கம் டர்ன்புல், கடந்த 3 ஆண்டுகளாக அந்நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், இவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதனைத் தொடர்ந்து கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற மால்கம், தனது பதவியை தக்க வைத்துக் கொண்டார்.

ஆனால், அவருடைய ஆட்சிக்கு எதிராக கடும் நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் உட்பட 3 அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

இதன் காரணமாக மீண்டும் பிரதமருக்கான ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தான் போட்டியிடபோவதில்லை என மால்கம் டர்ன்புல் அறிவித்தார். இந்நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜூலி பிஷ்ப், பொருளாளர் ஸ்காட் மோரிசன் ஆகியோர் போட்டியிட்டனர்.

இவர்களில் ஸ்காட் மோரிசன் அதிக ஓட்டுகள் பெற்றதால், அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக அவர் தெரிவாகியுள்ளார். இவர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் வரை பிரதமர் பதவியில் நீடிப்பார் என்று கூறப்படுகிறது.

Sam Mooy/AAPIMAGE

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...