அவுஸ்திரேலியாவில் தமிழக மாணவர்களின் விசா ரத்து!

Report Print Kabilan in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலிய அரசிடம் போலி சான்றிதழ்கள் சமர்பித்தது தொடர்பாக தமிழகம், கேரளாவைச் சேர்ந்த 22 மாணவர்களின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் தமிழ்நாடு, கேரளா மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் அவுஸ்திரேலியாவில் படித்து வருகின்றனர். அங்குள்ள தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வருபவர்களில், 22 பேர் அவுஸ்திரேலிய அரசிடம் சமர்பித்த சான்றிதழ்கள் போலியானவை என்று கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அவுஸ்திரேலிய அதிகாரிகள் 22 பேரின் விசாவை ரத்து செய்து, அதற்கான சான்றை மாணவர்களிடம் வழங்கியுள்ளனர். இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த 22 மாணவர்களும் உடனடியாக இந்தியாவுக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

அவர்கள் கூறுகையில், கோவையில் இயங்கி வரும் 3 தனியார் நிறுவனத்தின் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டதாகவும், தாங்கள் அவர்களிடம் அசல் சான்றிதழ்களை வழங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால், அந்த நிறுவனத்தினர் தான் போலியாக தேசிய அங்கீகார வாரியத்தின் சான்றிதழ்களை வழங்கி, தங்களை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பிவிட்டதாக குறித்த மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், குறித்த தனியார் நிறுவனங்களிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விசா ரத்து செய்யப்பட்ட மாணவர்களை இந்திய தூதரகம் மூலமாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...