என் நிலை யாருக்கும் வரவேண்டாம்: கண் மை போட்டதால் பார்வையை இழந்த பெண் விடுத்த எச்சரிக்கை

Report Print Raju Raju in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் காலாவதியான கண் மையை கண் இமைகளில் பூசிகொண்ட பெண்ணுக்கு கண் பார்வை பறிபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷெர்லி பாட்டர் என்ற பெண் கண் மையை தனது கண்களின் இமையில் பூசியுள்ளார்.

இதையடுத்து சில நாட்களில் அவர் கண்களில் எரிச்சல் ஏற்பட தொடங்கியது.

இதையடுத்து மருத்துவரிடம் சென்ற போது கண் மை மூலம் தொற்று ஏற்பட்டு அவரின் கண்கள் முழுவதும் பாதித்துள்ளது தெரியவந்தது.

இதோடு ஷெர்லி பயன்படுத்திய கண் மை 20 ஆண்டுகள் பழமையான காலாவதியானது எனவும் தெரியவந்துள்ளது.

ஷெர்லிக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் தனது கண் பார்வையை அவர் இழந்துள்ளார்.

தற்போது மிகவும் சிறியளவில் அவருக்கு கண் தெரியும் நிலையில் சில ஆண்டுகளில் முழு பார்வையையும் இழந்துவிடுவார் என தெரியவந்துள்ளது.

தற்போது கண்பார்வையற்றோர் உபயோகப்படுத்தும் வாக்கிங் ஸ்டிரிக்கை பயன்படுத்தும் ஷெர்லி, காலாவதியான பொருட்களை பயன்படுத்தாதீர்கள் என மற்றவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers