செல்பி எடுக்க முயன்ற இந்திய மாணவன் கடலில் விழுந்து பலி: அவுஸ்திரேலியாவில் சம்பவம்

Report Print Arbin Arbin in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவின் பெர்த் பகுதியில் தங்கி படித்து வந்தவர் இந்தியாவை சேர்ந்த அங்கித் (20).

இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அல்பானி நகரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க துறைமுகத்துக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

அங்குள்ள ஆபத்தான மலைப்பகுதிக்கு சென்று பாறை மீது நின்று நண்பர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்துக்கொண்டார்.

அதிக போட்டோ எடுக்கும் ஆர்வத்தில் பாறையின் நுனியில் நின்று கொண்டு அங்கித் செல்பி எடுக்க முயன்றதாக தெரிகிறது.

அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறிய அவர், 40 மீற்றர் உயரத்தில் இருந்து கடலில் விழுந்துள்ளார்.

கடல் நீரில் மூழ்கிய அவர் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவப்பகுதிக்கு விரைந்தனர்.

மீட்பு ஹெலிகொப்டர் உதவியுடன் ஒரு மணி நேர தேடுதலுக்கு பின்னர் அங்கித் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கித் உயிரிழந்தது தொடர்பாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க பொலிசார் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers