மூதாட்டிக்கு காதல் வலை வீசிய 3 நபர்கள்: பல மில்லியன் சொத்துக்கள் பறிபோன பரிதாபம்

Report Print Deepthi Deepthi in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவை சேர்ந்த மூதாட்டி ஒருவர் ஒன்லைன் மூலம் தனக்கு காதல் வலை வீசியவர்களை நம்பி தன்னிடம் உள்ள பாதி மில்லியன் சொத்துக்களை இழந்துள்ளார்.

தனிமையில் வசித்து வந்த Suzie என்ற மூதாட்டிக்கு 3 பேர் காதல் வலை வீசியுள்ளனர். அவர்களிடம் இருந்து உண்மையானஅன்பு கிடைக்கும் என நம்பிய மூதாட்டி கடைசியில் ஏமாந்துபோய் தனது பணத்தினை இழந்தது தான் மிச்சம்.

தான் எவ்வாறு ஏமாந்தார் என்பது குறித்து Suzie கூறியதாவது, ஒன்லைன் மூலம் பிரித்தானியாவை சேர்ந்த அழகான நபரின் தொடர்பு ஏற்பட்டது.

அவரும் நானும் நேரில் சந்தித்துக்கொள்ளாமல் தொடர்ந்து பேசி வந்தோம். அவர் என் மீது அன்பு வைத்திருக்கிறார் என நினைத்துக்கொண்டிருந்தேன்.

இதனால், அவர் என்னிடம் எது கேட்டாலும் வாங்கிகொடுப்பேன். லேப்டாப், மொபைல் என என்னிடம் வாங்கிகொண்டார்.

அவரது தந்தைக்கு $76,000 டொலர் பணம் தேவை இருக்கிறது என என்னிடம் பணம் கேட்டார். நானும் சிறிது கூட யோசிக்காமல் பணம் கொடுத்தேன்.

அவருக்கு தேவையானவற்றை வாங்கிகொண்ட பின்னர், என்னுடனான தொடர்வை துண்டித்துவிட்டார். இவருக்கு அடுத்தபடியாக அமெரிக்காவை சேர்ந்த Johnson Williams என்பவருட பழக்கம் ஏற்பட்டது.

என்னிடம் உள்ள சொத்துக்கள் குறித்து அறிந்துகொண்டவருக்கு, அவ்வப்போது தேவையான பணத்தினை எனது கணக்கில் இருந்து அவரது வங்கி கணக்குக்கு பரிமாற்றம் செய்வேன்.

இவருக்கு, ஒரு முறை பணம் தேவை என்பதற்காக எனது வீட்டினை விற்று பணத்தை கொடுத்தேன். ஆனால் இந்த உறவும் நீடிக்கவில்லை.

மூன்றாவதாக ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த suitor Godfrey Kyzungo என்பவருடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

இனிமேல் இவர்தான் எனது வாழ்க்கை என நம்பி, ஆப்பிரிக்காவுக்கு சென்று அவரை ஆசையாக திருமணம் செய்துகொண்டேன்.

ஆனால், அவரிம் நோக்கம் முழுவதும் என்னிடம் பணத்தின் மீது இருந்ததே தவிர, என் மீது அவர் அன்பாக இல்லை. இதனால் அவுஸ்திரேலியாவுக்கு திரும்பி வந்துவிட்டேன்.

இப்படி அன்புக்காக, 3 காதலர்களை நம்பி ஏமாந்துவிட்டேன், இதனை அனைவரும் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒன்லைன் மூலம் காதல் வசப்படுபவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இவர்களை நம்பி எனது பாதி மில்லியன் சொத்துக்களை இழந்தது தான் இறுதியில் எனக்கு நேர்ந்தது என கூறியுள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers