நாட்டையே உலுக்கிய சம்பவம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் சுட்டுக்கொலை

Report Print Deepthi Deepthi in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் நான்கு குழந்தைகள் உட்பட ஏழு பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு அவுஸ்திரேலியாவின் Osmington நகரிலேயே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது.

உள்ளூர் நேரப்படி காலை 5.15 மணியளவில் பொலிசுக்கு வந்த தகவலையடுத்து, விரைந்து சென்ற அதிகாரிகள் நான்கு குழந்தைகள் உட்பட ஏழு பேரின் சடலத்தை மீட்டனர்.

இதுகுறித்து பொலிசார் கூறியதாவது, நடந்த சம்பவம் கொலையா? தற்கொலையா? என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

நாங்கள் சம்பவம் இடத்திற்கு வந்து பார்க்கையில், 4 குழந்தைகளின் உடல்கள் கட்டிடத்திற்குள்ளும், 2 பெரியவர்களின் உடல்கள் கட்டிடத்திற்கு வெளியேயும் கிடந்தன.

மேலும், அந்த இடத்தில் 2 துப்பாக்கிகள் கிடந்தன. இறந்துபோனவர்களின் குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொண்டுவிசாரிக்கவுள்ளோம். இதுதவிர வேறு எதுவும் தற்போதைக்கு தெரிவிக்க இயலாது என கூறியுள்ளனர்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers