சொந்த பிள்ளைகளை துஷ்பிரயோகம் செய்த கொடூர தந்தை

Report Print Arbin Arbin in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் பிரபல ஹாலிவுட் திரைப்படமான Frozen-ஐ காட்டி தந்தை ஒருவர் சொந்த பிள்ளைகளையே துஷ்பிரயோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள அந்த நபர் மீது பாலியல் பலாத்காரம், பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட 19 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, 8 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி குயின்ஸ்லாந்தின் மகே மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

குயின்ஸ்லாந்து பகுதியில் குடியிருக்கும் 40 வயது மதிக்கத்தக்க அந்த நபருக்கு 2 பெண் குழந்தைகளும் ஒரு மகனும் உள்ளனர்.

5 மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட அந்த குழந்தைகளை குறித்த தந்தை, Frozen திரைப்படத்தை போட்டுக்காட்டி தமது படுக்கை அறைக்கு வரவழைத்து வந்துள்ளார்.

மட்டுமின்றி தனது சொந்த பிள்ளைகளையே பாலியல் உறவுக்கு தூண்டுவது மட்டுமின்றி தன்னுடனும் உறவு கொள்ள வைத்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு தமது 6 வயது மகளுடன் வலுக்கட்டாயமாக உறவு வைத்துக் கொண்டுள்ளார்.

தமது மனைவி வேலைக்கு செல்லும் நேரத்தில் தனது சுய ரூபத்தை சொந்த பிள்ளைகளிடம் காட்டி வந்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் கைதாகும் வரை இது நடந்து வந்துள்ளது.

இந்த நிலையில் ஒரு நாள் சமையலறையில் வைத்து தமது மகளில் ஒருவர் மீது ஆபாசமாக நடந்து கொள்வதை பார்க்க நேரிட்ட குழந்தைகள் காப்பாளர் பெண்மணி, பிள்ளைகளின் தாயாரிடம் தகவல் அளித்துள்ளார்.

இதனையடுத்தே இச்சம்பவம் பொலிஸ் புகாராக பதிவாகியுள்ளது. குறித்த நபரின் சிறுவயதில் அவரது தந்தை ஒரு பெட்டி பீருக்காக தமது நண்பர்களிடம் அவரை வாடிக்கையாக கையளித்து வந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers