மகனின் கைப்பேசியில் இருந்த புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த தாய்

Report Print Deepthi Deepthi in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் தாய் ஒருவர் தனது 15 வயது மகனின் கைப்பேசியில் இருந்த குறுஞ்செய்திகள் மற்றும் புகைப்படங்களை பார்த்து அதிச்சியடைந்துள்ளார்,

ஜெம்மா என்பவரின் 15 வயது மகன் கைப்பேசியை அதிகமாக பயன்படுத்தும் பழக்கம் கொண்டவன். இதனால் தனது மகனின் கைப்பேசியை ஜெம்மா பார்த்துள்ளார்.

பார்த்த அவர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். தனது மகன் பாலியல் தொழிலாளிகளுடன் தொடர்பில் இருந்துள்ளான்.

backpage.com என்ற தளத்தின் வாயிலாக அவர்களை தொடர்பு கொண்டுள்ளான்.

அவர்களிடம் தனது போலியான வயதை கூறி, எந்த இடத்தில் சந்திக்கலாம், மணி நேரத்திற்கு எவ்வளவு தொகை வசூலிப்பீர்கள் என கேட்டுள்ளான்.

அந்த பாலியல் தொழிலாளியும், நல்ல குடியிருப்பாக இருந்து வசதியான இடம் என்றால், ஒரு நாளைக்கு 900 டொலர் வாங்குவேன் என பதிலளித்துள்ளார். மேலும் இடங்களுக்கு ஏற்றவாறு பணம் பெற்றுக்கொள்வேன் என கூறியுள்ளார்.

மேலும், சில தவறான புகைப்படங்களும் பகிந்துகொள்ளப்பட்டுள்ளன. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தாய், நான் பாலியல் தொழிலாளிகளை குறைசொல்லவில்லை. ஆனால் எனது மகன் எவ்வாறு, இந்த தளத்தினை தொடர்புகொண்டான். இதுபோன்ற சிறு வயது பிள்ளைகளுக்கு எவ்வாறு அந்த இணையதளம் வழிவகுக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதுமட்டுமின்றி, இப்படி எனது மகன் விடயத்தில் நான் கவனிக்காமல் இருந்துவிட்டேன். இதன் மூலம் எனது மகனை அக்கறையோடு கவனித்துகொள்வேன் என கூறியுள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers