அவுஸ்திரேலியாவில் காட்டுத்தீ: வீடுகளை காலி செய்யச் சொல்லும் பொலிசார்

Report Print Balamanuvelan in அவுஸ்திரேலியா
43Shares
43Shares
lankasrimarket.com

அவுஸ்திரேலியாவின் சிட்னி பகுதிக்கு மேற்கே பயங்கரமான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால் அது வீடுகளைத் தாக்கலாம் என்னும் அச்சத்தில் பொலிசார் அங்குள்ளவர்களை வெளியேற்றி வருகிறார்கள்.

சிட்னிக்கு மேற்கே தொடங்கிய காட்டுத்தீ ராணுவவீரர்கள் குடியிருப்பு வரை வந்துவிட்டது.

அங்கு எரிபொருள் கிடங்கு ஒன்று இருப்பதால் அதைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

நகருக்கு 35 கிலோமீற்றர் தொலைவில் Casula பகுதியில் புற்கள் பற்றி எரியத்தொடங்கிய நிலையில் அது தற்போது காட்டுத்தீயாக உருவெடுத்துள்ளது.

மொத்தப் பகுதியிலும் பயங்கரமான கரும்புகை சூழ்ந்துள்ளதால் Holsworthyக்கும் Glenfieldக்கும் இடையேயான ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

வானத்தில் பத்து மீற்றர்கள் வரை உயரமாக கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்க பத்து தீயணைப்பு வாகனங்களும் ஒரு விமானமும் கூட அனுப்பப்பட்டுள்ளன.

தீப்பிடித்ததன் காரணம் இதுவரை தெரியாத நிலையில் மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்றும் வீசிக்கொண்டிருப்பதால் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் அதற்கு பதில் பேருந்து சேவைகள் களமிறக்கப்பட்டுள்ளன.

மக்கள் அத்தியாவசிய தேவை ஏற்பட்டாலொழிய பயணங்களை தவிர்க்கவோ தாமதப்படுத்தவோ கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்