கடலில் வைத்து இறந்துபோன கர்ப்பிணி சுறாவுக்கு பிரசவம் பார்த்த மீனவர்

Report Print Deepthi Deepthi in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் மீனவர் ஒருவர் இறந்துபோன சுறா மீனின் வயிற்றில் இருந்து 92 குட்டி சுறாக்களை வெளியே எடுத்துள்ளார்.

Mathew Orlov(46) என்ற மீனவர், அவுஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா கடற்கரையில் வழக்கம்போல தனது படகில் மீன்பிடிக்க சென்றுள்ளார்.

அப்போது, கடலில் உள்ள மற்ற சுறாக்களால் தாக்கப்பட்ட கர்ப்பிணி சுறா ஒன்று இறந்துபோன நிலையில், மேத்திவ்வின் படகில் மோதியுள்ளது. சுறா இறந்துவிட்டது என மேத்திவ் நினைக்கையில், அதன் வயிற்றில் மட்டும் துடிப்பு இறந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, கத்தியை எடுத்து சுறாவின் வயிற்றை கிழித்து, அதன் வயிற்றில் இருந்து 92 குட்டி சுறாக்களை வெளியில் எடுத்து கடலில் விட்டுள்ளார்

இதுகுறித்து மேத்திவ் கூறியதாவது, எனக்கு கடல்வாழ் உயிரினங்கள் என்றால் மிகவும் பிடிக்கும், அவை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஒரு முக்கிய காரணியாகும்.

நான் இதற்கு முன்னர் இதுபோன்று சிகிச்சையை செய்ததில்லை, சுறாவின் வயிற்றில் குட்டிகள் இருப்பதை அறிந்துகொண்டு கடலில் வைத்தே அதன் வயிற்றில் இருந்த குட்டிகளை வெளியில் எடுத்தேன்.

குட்டிகள் அனைத்தும் ஆரோக்கியமாக இருந்தன என கூறியுள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers