பொம்மை கண்காட்சியில் அழையாமல் நுழைந்த பாம்பு- விளைவு என்ன நீங்களே பாருங்கள்

Report Print Trinity in அவுஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் குழந்தையின் பொம்மைக் கண்காட்சியில் அழையாமல் நுழைந்த பாம்பை அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பாக இடமாற்றம் செய்தனர்.

ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து பீக் கிராசிங்கில் உள்ள ஒரு வீட்டில்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து முகநூலில் பதிவேற்றியிருக்கிறார் அச்சிறுமியின் அம்மா.

சம்பவம் நடந்த அன்று சிறுமியின் தந்தை அவளது அறையின் ஜன்னல் சுவற்றில் இந்த கொடிய வகை நச்சுப் பாம்பை பார்த்திருக்கிறார்.

பார்த்த உடன் கவனமாக செயல்பட்ட அவர் உடனடியாக குடியிருப்பில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளை அழைத்திருக்கிறார்.

சில நிமிடத் தேடல்களுக்குப் பின் அதனைப் பிடித்த அதிகாரிகள் அது மிகவும் கொடிய வகையை சேர்ந்தது என்று கூறினர்.

சிவப்பும் கருப்புமான அந்த பாம்பு மிகவும் நச்சுத்த தன்மை வாய்ந்தது என்றும் அவரது கணவர் பார்த்திரா விட்டால் பெரும் ஆபத்தாகி இருந்திருக்கும் என்றும் மேலும் அது எவ்வளவு நேரமாக அங்கு இருந்திருக்கிறது என்பது உறுதியாக சொல்ல முடியவில்லை என்றும் கூறியிருந்தார்

நல்ல வேளையாக அன்று அவர் மகள் அந்த அறையில் இல்லை எனும் அவர் இருந்தாலும் பாம்பு நுழைந்தால் அதனைப் பத்திரமாகப் பிடித்து வெளியே விட என்னென்ன செய்ய வேண்டும் என்பதைக் கற்றுக் கொண்டதாக விளையாட்டாக அந்த வீடியோவில் கீழ் பதிவிட்டிருந்தார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers