அவசர அவசரமாக மூடப்பட்ட பிரிஸ்பேன் விமான நிலையம்: காரணம் இதுதான்

Report Print Arbin Arbin in அவுஸ்திரேலியா
42Shares

வெடிகுண்டு என எழுதப்பட்ட கருப்பு லக்கேஜ் பையால் ஏற்பட்ட பீதியை அடுத்து அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் சர்வதேச விமான நிலையம் அவசர அவசரமாக மூடப்பட்டது.

இந்தியாவின் மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனுக்குச் சென்ற சர்வதேச விமானத்தில் அனுப்பட்ட கருப்பு பை ஒன்றில், "Bomb to Brisbane" என எழுதப்பட்டிருந்தது.

அதைக் கண்ட அவுஸ்திரேலிய விமான நிலைய அதிகாரிகள் பிரிஸ்பேனுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பார்சல் அனுப்பட்டுள்ளதாக கருதினர்.

இதனை அடுத்து, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், உடனடியாக விமான நிலையமும் மூடப்பட்டது. கருப்பு லக்கேஜ் பையை கொண்டு வந்த 65 வயது வெங்கட லக்‌ஷ்மி என்ற பயணியிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

ஆனால் Bombay என்பதை Bomb என சுருக்கமாக எழுதப்பட்டிருப்பதாக அவர் விளக்கமளித்துள்ளார். இதனை ஏற்கத் தயங்கிய அதிகாரிகள், மர்மப் பையை சோதனையிட்டனர்.

அதில் வெடிகுண்டுகள் ஏதுமில்லை என்பதை உறுதிப்படுத்தியதை அடுத்து, பதற்றம் தணிந்தது.

1995ஆம் ஆண்டே பாம்பே (Bombay) எனும் பெயர் மும்பை என மாற்றப்பட்ட நிலையில், சர்வதேச விமானநிலையங்களில் மும்பை BOM என சுருக்கமாக குறிப்பிடப்பட்டு வருகிறது.

எனினும், மும்பையில் இருந்து கொண்டு வரப்பட்ட லக்கேஜ் பை, Bomb என தவறுதலாக குறிப்பிட்டதாலேயே இந்த தேவையற்ற பதற்றம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்