கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது காமன்வெல்த்: சிறப்புப் படங்கள்

Report Print Balamanuvelan in அவுஸ்திரேலியா
70Shares

2018 ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் சற்று முன் தொடங்கின.

இளவரசர் சார்லஸ் உட்பட பல பிரபலங்கள் பங்கு கொள்ளும் இந்த போட்டி தொடங்கும் சற்று முன் வரை மழை கொட்டோ கொட்டென்று கொட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் Carrara ஸ்டேடியத்தில் காமன்வெல்த் போட்டிகளின் தொடக்க விழா தொடங்குவதற்கு சற்று முன் வானம் தெளிவாகி 35,000 பார்வையாலர்களை நிம்மதியடைடச் செய்தது.

அவுஸ்திரேலியாவின் பூர்வக்குடிமக்களின் கலாச்சாரத்தை மையமாகக் கொண்டு இந்த தொடக்க கலை விழா நடத்தப்படுகிறது.

விழாவின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பில் அவுஸ்திரேலியா சார்பாக ஹாக்கி வீரர் Mark Knowles அந்நாட்டுக் கொடியை சுமந்து வந்தார்.

முதலாவது அணியாக ஸ்காட்லாந்து வீரர்கள் அணி வகுத்து வந்தனர். கலை நிகழ்ச்சிகளின்போது எடுக்கப்பட்ட வண்ணமயமான புகைப்படங்கள் காண்போரைக் கவர்ந்திழுக்கின்றன.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்