கருப்பினமே உனது நாட்டுக்கு திரும்பி செல்: அவுஸ்திரேலியாவில் பெண்ணின் மீது இனவெறி தாக்குதல்

Report Print Deepthi Deepthi in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஓடும் ரயிலில் வைத்து இந்திய பெண்மணி மீது அந்நாட்டை சேர்ந்த பெண் இனவெறி ரீதியான வார்த்தைகளால் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைளதங்களில் பதிவிடப்பட்டதையடுத்து வைரலாகிறது. அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளதாவது, மெட்ரோ ரயிலில் அனைவரும் அமர்ந்திருக்கையில், அவுஸ்திரேலிய நாட்டை சேர்ந்த பெண்மணி, இந்திய பெண்ணைநோக்கி என்னைப்பார்ப்பதை முதலில் நிறுத்து.

நீ உனது நாட்டுக்கு திரும்பி செல் என்று கூறி curry muncher (இந்தியர்களின் நிறத்தை கிண்டல் செய்யும் பெயர் இது) என்ற வார்தையை பயன்படுத்துகிறார்.

இதனை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த இந்திய பெண்மணி அதன் பின்னர், வெள்ளையின பெண்மணியை நோக்கி, நீ யாரென்று எனக்கு தெரியாது, நான் யாரென்றும் உனக்கு தெரியாது.

இது என்னுடைய நாடு, இது உன்னுடைய நாடு கிடையாது. நீ வேண்டுமானால் இங்கிருந்து செல் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டுள்ளது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers