கர்ப்பப்பை வாய் புற்று நோயில்லாத முதல் நாடாகும் வாய்ப்பு எந்த நாட்டுக்கு தெரியுமா?

Report Print Balamanuvelan in அவுஸ்திரேலியா

உலகம் முழுவதிலும் 250,000 பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்று நோயினால் (cervical cancer) இறப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கும் அதே நேரத்தில் கர்ப்பப்பை வாய் புற்று நோயில்லாத முதல் நாடாகும் வாய்ப்பு அவுஸ்திரேலியாவுக்கு கிடைக்க இருப்பதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

99% Human Papillomavirus என்னும் வைரஸால் உருவாகும் இந்த நோய்க்கெதிராக அவுஸ்திரேலியாவில் 2007 ஆம் ஆண்டு பையன்களுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் துவங்கப்பட்டது.

இதனால் இந்நோய்த்தொற்றின் அளவு கணிசமாக குறைந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த பத்து ஆண்டுகளில் 18 முதல் 24 வயதுடைய அவுஸ்திரேலிய இளம்பெண்களில் இந்நோயின் விகிதம் 22.7 சதவிகிதத்திலிருந்து 1.1 சதவிகிதமாக குறைந்துள்ளது.

இந்த தடுப்பூசித் திட்டத்திற்கு முன் அவுஸ்திரேலியாவின் இளவயதினரில் பெரும்பாலானோர் இந்நோய்த்தொற்றிற்கு ஆளாகியிருந்தது அதிர்ச்சிக்குரிய தகவலாகும்.

தற்போது இந்த தடுப்பூசியினால் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியினால் உலகிலேயே கர்ப்பப்பை வாய் புற்று நோயில்லாத முதல் நாடாகும் வாய்ப்பு அவுஸ்திரேலியாவுக்கு கிடைக்க இருப்பதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்