கிர்ணிப்பழம் சாப்பிட்டதால் உயிரிழந்த மூன்று பேர்: எச்சரிக்கை செய்தி

Report Print Raju Raju in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் புதியவகை கிருமி தொற்று கிர்ணிப்பழத்தில் பரவியதன் காரணமாக இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

Listeriosis எனப்படும் இந்த அபூர்வ தொற்று உணவு பொருட்களின் மீது ஏற்படும் listeria என்னும் பாக்டீரியா கிருமியால் உருவாகிறது.

இதுவரை இந்த கிருமியால் நாட்டில் 15 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் நாட்டின் சுகாதார துறை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே வெட்டப்பட்ட பழங்களை மக்கள் உடனடியாக தூக்கி போட்டு விட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Credit: Getty

முக்கியமாக கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் இந்த பழங்களை சாப்பிடாமல் இருப்பது நல்லது.

பண்ணை விலங்கு உள்ளிட்டவைகளால் இந்த கிருமி பழங்களில் பரவும் என தெரியவந்துள்ள நிலையில் இதன் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கிருமியானது மனிதர்களை பாதித்தால் உடல்வலி, தலைவலி, வாந்தி, வயிற்றுபோக்கு, 38 செல்சியர்ஸ்க்கு அதிகமான ஜூரம் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

இது போன்ற சமயத்தில் மருத்துவரை உடனடியாக நாட வேண்டியது அவசியம் என சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.

Credit:Getty

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்