கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற கேரள பெண்: சிக்கியது எப்படி?

Report Print Raju Raju in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த கேரளா பெண் குற்றவாளி என நீதிமன்றத்தால் கிட்டத்தட்ட நிரூபிக்கப்பட்டுள்ளார்.

கேரளாவை சேர்ந்தவர் சாம் ஆப்ரஹாம், இவர் மனைவி சோபியா சாம் (33), தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.

இவர்கள் அவுஸ்திரேலியாவில் வசித்து வந்தார்கள், இந்நிலையில் கடந்த 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆப்ரஹாம் தனது வீட்டில் சடலமாக கிடந்தார்.

ஆரம்பத்தில் அவர் மாரடைப்பால் இறந்ததாக கூறப்பட்ட நிலையில், அவர் சயனைடு கொடுத்து கொல்லப்பட்டதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.

Supplied


இது தொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில் சோபியா, தனது கள்ளக்காதலன் அருண் கமலாசனனுடன் சேர்ந்து ஜூசில் சயனைடு கலந்து கொடுத்து ஆப்ரஹாமை கொலை செய்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் இவர்கள் மீதான விசாரணை மெல்போர்ன் நீதிமன்றத்தில் நடந்தது.

மருத்துவர்கள், பொலிசார், அக்கம்பக்கத்தினர் கூறிய வாக்குமூலத்தின் படி, ஆப்ரஹாமின் மரணத்துக்கு சோபியாவும், அருணும் தான் காரணம் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இதையடுத்து அவர்கள் குற்றவாளிகள் என கிட்டதட்ட உறுதியாகிவிட்ட நிலையில் கடைசி கட்ட முன் தண்டனை விசாரணை அடுத்த மாதம் 21-ஆம் திகதி நடைபெறவுள்ளது.

supplied

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers